தளம் :http://www.lisaling.com/
பக்கம் :http://www.lisaling.com/gang
மாரா சால்வட்ரூச்சா , லாஸ் ஏஞ்சலசை சேர்ந்த ஒரு சமூகவிரோத கும்பல் . MS , M-13 , மாரா என்று பல புனைப்பெயர்கள் . தங்களுக்கென தனி சைகை மொழி , பழக்க வழக்கங்கள் வைத்திருக்கிறார்கள் . நேஷனல் ஜியாகரபிக்கின் கூற்றுப்படி உலகின் மிகப்பெரிய சமூக விரோதிகளின் கூட்டமைப்பு . லாஸ் ஏஞ்சலஸில் சிறு துரும்பாக இருக்கும்போதே வெட்டாமல் விட்டது இன்று சர்வதேச அளவில் ஆபத்தை விளைவித்துக்கொண்டு இருக்கிறது .
இவர்கள் நகரில் கிராஃபிட்டி { ஒழுங்கான சுவற்றில் பெயின்ட்டடித்து அசிங்கம் செய்வது } , மூலமாக தங்கள் எல்லைகளை மார்க் செய்வதும் , புது ஆட்களை சேர்ப்பதற்க்கு சில சடங்குகளை செய்வதுமென தங்களுக்கு ஒரு தனித்தன்மையை காட்டுகிறார்கள் . 40 நிமிட NGC வீடியோ இணைக்கப்பட்டுள்ளது . புதுப்பேட்டை படம் பார்க்கும் எஃபக்ட் எழுவதை தவிர்க்க முடியவில்லை . நம்மூரில் எதும் இது போல தனித்தன்மைவாய்ந்த கும்பல் உள்ளதா என்று தேட வேண்டும் .
இதே சைட்டில் இந்த கும்பலை சேர்ந்தவர்களின் நேர்கானலும் இருக்கிறது . . அம்மனி லிசா லிங்கின் மற்ற சமூக சேவை சம்பந்தப்பட்ட செயல்களும் இடம்பெற்றுள்ளன .
many like this group now in tamilnadu.
மறுமொழி by siva — மே 21, 2008 @ 7:12 பிற்பகல் |