நெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .

மே 29, 2008

என்னுயிர்த்தோழா . .

கோப்பு வகை: tamil, தமாசு, தமிழ் — இணையக் கடலோடி @ 12:57 பிற்பகல்
Tags: , , ,

பாரதிராஜா இயக்கிய மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்று என்னுயிர்த்தோழன் , அதைப்பற்றியும் , அதில் இளையராஜா இசையமைத்துப்பாடிய கானா பாடலைப்பற்றியும் இங்கே நாம் பார்க்கப்போவதில்லை . .. மாறாக என்னை எஸ்.எம்.எஸ்சிலும் ஈமெயிலிலும் இதுபோன்ற தகவல்களை அனுப்பி காண்டேற்றியவர்களை பதிலுக்கு காண்டேற்ற முடியாமல் போன ஆதங்கத்தில் , உங்கள் நேரத்தை வீணடிக்கவே இந்தப் பதிவு .

என்னுயிர் நண்பா உண்மைய சொல்லு , நேத்து நைட் நீ எங்கயிருந்த . நான் ஃபோன் பன்னப்ப ஒரு லேடி ” கஸ்டமர் பிஸின்னு” சொல்லுச்சே , இதெல்லாம் நல்லாவா இருக்கு ???

என்னுயிர்த்தோழா , செத்த பிறகும் சைட் அடிக்க மருத்துவம் காட்டிய வழி என்று கண் தானம் செய்வது பற்றி விளம்பரப்படுத்தியாக வேண்டுமா ??

என்னுயிர்த்தோழா , பீரடித்துக்கொண்டு காரோட்டாதே , பீரை சிந்திவிடுவாய் நீ .

என்னுயிர்த் தோழியே , நீ உன் நண்பர்களிடம் மூன்று மணி நேரத்திற்க்கு குறையாமல் செல்பேசுவதெல்லாம் சரிதான் , ஆனால் அதற்காக ராங் நம்பர் வந்தால் கூட அவர்களுடன் ஒரு மணி நேரம் பேச வேண்டுமா ???

என்னுயிர் நண்பா , BOSS என்பவர் மேகம் போன்றவர் , அவர் காணாமல் போகும் தினம் பிரகாசமாக இருக்கும்.

என்னுயிர் நண்பா , உன் கனவினைப்பொறுத்தே உன் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது , உடனே தூங்கச்செல் .

என்னுயிர் நண்பா , எல்லா ப்ரோஜெக்ட்களும் ஏழு நிலைகளை கடக்க வேண்டியிருக்கிறது , அவையாவன

  • ஆழம் தெரியாமல் ப்ரோஜெக்டை ஒத்துக்கொள்வது
  • எல்லோருக்கும் ஆர்வக்கோளாறை கிளப்புவது
  • ப்ரோஜெக்ட் மேல் வெறுப்புத்தட்ட ஆரம்பிப்பது
  • ஒட்டுமொத்தமாக எல்லாரையும் குழப்புவது
  • தப்பு செய்தவனை தேடுவது
  • அப்பாவிகளை தண்டிப்பது
  • சம்பந்தமே இல்லாதவனை பதவி உயர்த்துவது .

== எப்போவாச்சும் தொடரும் ==

சுட்டது : SMS , ஈமெயில்கள்.்

இதுவரை மறுமொழிகள் இல்லை »

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.