சமீபத்தில் எனக்கு வந்த ஒரு ஃபார்வேர்டிது . ஒரு ஐ.டி. கம்பெணியில் உண்மையாகவே நடைபெற்ற மெயில் பரிமாற்றமிது .
|
அன்பர்களே , பல உணவு விடுதிகள்/கடைகள் மேற்குறிப்பிட்ட வழிமுறையை பின்பற்றுகின்றன . இந்த ஐயத்தினை நமது சக ஐ.டி.யாளர்கள் ஆராய்ந்து தீர்வளிக்க வேண்டுகிறேன் . !! அன்புடன் |
|
உக்காந்து யோசிப்பாய்ங்களோ !!! ??? அன்புடன் |
|
திரு “மு” அவர்களே , எம்மிடம் இதற்க்கு பதிலுண்டு .
‘நான் – வெஜ்” பிரியாணிகளுக்கு கீழ்கண்ட கால்க்குலேஷனை பின்பற்றவும் பிரியாணி வகை : பொருளடக்கம் முட்டை = முட்டை + பிரியாணி முட்டை – முட்டை = பிரியாணி => 0 = பிரியாணி ‘0′ இஸ் ஈக்வல் டூ முட்டை ( தமிழில் ) . ஆகவே முட்டை கட்டாயம் , பிரியாணியில் . Hence Proved . அன்புடன் |
|
பிரமா. . . தம் . அன்புடன் |
|
எம் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய முயன்ற “நி” க்கு நன்றிகள் பல .
இவ்வாக்கியம் மெய்யானால் , வெஜ்-பிரியாணி வாங்கும் தாவர பட்சினிகள் என்செய்வர் ?
ஆனால் இறால் பிரியாணிக்கு இத்தீர்வு பொருந்தவில்லையே , ( சம்பவம் நடந்த ) அன்று கூட இறால் பிரியாணியுடன் முட்டை வரவில்லை , மாறாக , மட்டன் பிரியாணியுடன் முட்டை வந்ததே ?? உபயம் – “ECR-FarmHouse” நன்றிகளுடன் |
|
கீழ்கண்ட இன்னுமொரு தேற்றத்தை கவணிக்கவும் . திரு “நி”யின் தியரிப்படி நான் – வெஜ் பிரியாணியில் முட்டை கட்டாயமென வைப்போம் . ஆக சிக்கன் பிரியாணி + முட்டை பிரியாணி + இறால் பிரியாணி = நான் – வெஜ் பிரியானி – (1) சிக்கன் பிரியாணி = ஒரு முட்டை சப்ஸ்டிடியூட்டினால் 1 முட்டை + 1 முட்டை + இறால் பிரியாணி = நான் – வெஜ் பிரியாணி . ஆனால் ஆகவே மேற்கண்ட அனைத்தையும் (1) ல் பொருத்த 2 முட்டை + இறால் பிரியாணி = 1 முட்டை சோ , இறால் பிரியாணி = 1 முட்டை – 2 முட்டை Hence Proved அன்புடன் |
|
மரியாதைக்குரிய “பூ” அவர்களே , தங்கள் கூற்றுப்படி இறால் பிரியாணி = – முட்டை என்றால் , அது , ஹோட்டலில் இறால் பிரியாணி போஜிப்பவர் , ஓட்டல் சர்வருக்கு ஒரு முட்டை தரவேண்டுமென்ற நிலைப்பாட்டை உருவாக்குகிறதே . நன்றிகளுடன் |
|
அது ஒரு நிகழ்வாக உருவாகுமெனில் , கொடுக்க வேண்டிய முட்டை கோழி முட்டையா , வாத்து முட்டையா அல்லது மனித முட்டையா என்ற ஐயம் எழுவதை தவிர்க்கவியலாது . அன்புடன் |
இது நாம் சர்வருக்கு கொடுக்க வேண்டிய நிலைப்பாட்டினை அளிக்கவில்லை , மாறாக இறால் பிரியாணி முட்டையில்லாமல் நமக்கு வழங்கப்படும் என்ற பொருளையே அளிக்கிறது . அன்புடன் |
|
தங்கள் கணக்கீடுகளின் படி இறால் பிரியாணி = – முட்டை ( ஆனால் 0 = முட்டை ) ஆக இறால் பிரியாணி + முட்டை = முட்டை ஐயகோ , ரிசல்ட்டில் முட்டை வருகிறதே . ஆனால் நமக்கு தேவை பிராவ்ன் பிரியாணிதான் . இறால் பிரியாணி + முட்டை = முட்டை ஆகவே . . நமக்கு இறால் பிரியாணி வேண்டுமென்றால் அதை முட்டையில்லாமல் தான் சாப்பிடவேண்டுமென்று கணிதவியல் மூலமாக நாம் ஒரு தீரவுக்கு வரமுடிகிறது ,். அன்புடன் |
சுட்ட விதம் : ஈ மெயில் பார்வேர்டுகளிலிருந்து .
இறால் பிரியாணி + முட்டை = முட்டை
Comment by jayachandran123 — ஜூலை 24, 2008 @ 11:29 மு.பகல் |
இப்பவே கண்ண கட்டுதே…
தாங்க முடியல..
Comment by eegarai — டிசம்பர் 5, 2008 @ 12:49 மு.பகல் |
ஆஹா.. இதில் இருந்து புரிந்து கொண்டது என்ன என்றால், ”நி” ஒழுங்கா கணக்கு பாடம் படிச்சு இருக்கார்.
Comment by இராகவன், நைஜிரியா — டிசம்பர் 17, 2008 @ 12:23 பிற்பகல் |
என்னை வுட்டுடுங்கப்பா!!! முடியல்ல!!!!
Escappppeee!!!
Comment by Naraiyooran — டிசம்பர் 17, 2008 @ 5:15 பிற்பகல் |