பொறியியற்ச்சரிதம்


பன்னிரண்டாம் வகுப்பு முடிந்தவுடன் வாழ்க்கையின் முக்கிய முடிவான “இனி என்னவாகப்போகிறோம்  ” , என்ன படிக்கபோகிறோம் என்ற முக்கிய முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் பலருக்கு இருக்கிறது . அதிலும் சில ரகம் உண்டு , அப்பா , அம்மா , மாமா, சித்தப்பா , ஒண்ணுவிட்ட அங்கிள் இப்படி யாரோ சொன்ன ஒரு கோர்ஸ்ல சேர்றது ஒரு வகை , இன்னொன்னு  தெளிவா , நான் இன்னவாக போறேன்னு சொல்லி ட்டு கில்லி அடிக்க்கறது . இது ரெண்டுக்கும் சம்பந்தம் இல்லாம் என்னவாக போறோம்ன்னு எந்த ஒரு தெளிவும் இல்லாதவங்கள பத்துன கதை இது .

இந்த க்ருப்ல பல பேர் கடைசியா , அதுலயும் குறிப்பா ரெண்டாம் நிலை எஞ்சினியரிங் காலேஜ் எதுலயாவது ,  வந்து சேர்ந்துருவாங்க .காலெஜ் , ஹாஸ்டல் இதெல்லம் ஆரம்பத்துல கொஞ்சம் புதிரா இருக்கும் . ஆனா போகப்போக புதுசா அனுபவிக்கற சுதந்திரம் , புது நட்பு வட்டாரம் , கண்டுக்க ஆளில்லாத வாழ்க்கை , இதெல்லாம் ஆள உள்ள இழுத்துக்கும் . கடுப்படிக்கற வாத்தியார்களோட நாள்பூரா கிளாஸ்ல தூங்கிட்டு , மெஸ்ல போடற “சாப்பாடு மாதிரி. . ” ஐட்டத்த சாப்பிட்டு , அர்த்த ராத்திரி வரை படம் பாத்து கொண்டாட்டமா போற வாழ்க்கை ரொம்ப புடிச்சுரும் .

ஒரு வழியா நம்மாளும் முன்னாடி பெஞ்சில இருந்து கொஞ்ச கொஞ்சமா முன்னேறி கடைசி பென்ஞ்சுக்கு வந்து சேந்துருவாரு . CGPA ன்னா என்ன , அத்த எப்படி கணக்கு போடறானுகன்னு நமக்கே ஒன்னும் வெளங்காததால , வீட்டுலயும் புரியாம , பையன் ஏதோ பெயிலாகாம படிக்கறானேன்னு சந்தோசப்பட்டுக்குவாங்க . வாரக்கடைசில வீட்டுக்கு போற  டிரிப் எல்லாம் இப்பொ நண்பர்களோட ஊர் சுத்தற டிரிப்பா மாறி இருக்கும் . இதுக்குள்ள ரெண்டு வருஷம் முடிஞ்சுருக்கும் .

மூனாவது வருஷ ஆரம்பத்துலதான் பிளேஸ்மன்ட்டுகல பத்தி வாத்தியார்க பயமுறுத்த ஆரம்பிப்பாங்க . கடைசியில அடிச்சு புடிச்சு எதோ ஒரு ஐ.டி கம்பெனில வேலையும் கெடச்சுரும் . ஆனா பைனல் இயர் வரும்போதுதான் நம்மாளுக்கு இப்போ வாழ்க்கைல என்ன பன்னப்போறோம்ங்கற கேள்வியே எழும் . வெவரமானவங்க என்ன ஆகனும்ன்னு ஆசப்பட்டாங்களோ அதநோக்கி நகந்துருவாங்க .ஆனா நம்மல மாதிரி லட்சியம் கிட்சியம் எல்லாம் சினிமால மட்டும்பாத்த ஆளுகளுக்கு என்ன பன்றதுன்னே தெரியாது . அதுனால உக்காந்து ஒரு லிஸ்ட் போடுவாங்க.

சாய்ஸ் 1 ) CAT – ம்ஹும் . கஸ்டம் . கவுண்டமனி சொல்ற மாதிரி ” இது ராஜா அண்ணாமலைபுரம் போற மூஞ்சி அல்ல , கண்ணம்மாபேட்டை போற மூஞ்சி தான் இது .

2) GATE – இதுவும் கஸ்டம் . எக்ஸ்பீரியன்ஸ் வேற கேப்பானுக

3) கெடச்ச வேலைல சேர்றது – எதுக்கும் அத பேக் அப் மாதிரி வெச்சுக்களாம்

4) IAS – அதே ராஜா அண்ணாமலைபுரம்

5) GRE

GRE  . USA .  MS . ஆகா .. அற்புதம் . அமேரிக்காய் . ஊஹூ . . . ஏதாவது செஞ்சு அங்கன எப்படியாவது போயிறனும்ன்னு இப்போ நாபிக்கமலத்துலருந்து நாடி நரம்பெல்லாம் சொல்லும் . தேராத கேசுன்னு நெனச்ச டாஸ்மாக்க தாண்டாத சீனியருக எல்லாம் இப்போ பப் , கிளப்புன்னு போஸ் கொடுக்கற பிக்காஸா லிங்குக எல்லாம் கண்ணு முன்னாடி வரும்  . சரி் பொறந்ததுக்கு ஒரு பர்ப்பஸ் கெடச்சதுன்னு நம்மாளு எல்லா தகவலும் திரட்டி ஆர்வமா வேலைய ஆரம்பிப்பாரு . ஹாஸ்டல் பயலுகளுக்கு தெரியாம GRE புக்க ரூமுக்கு கடத்திட்டு வந்து ( இல்லாட்டி காரிடார்ல “மச்சான் இவன் GRE எல்லாம் படிக்கறான்னுஅபாயக்குரல் எழுப்பிருவானுக”) படிக்க ஆரம்பிப்பாரு, சும்மா வாங்குன பாவத்துக்கு புக்க பொரட்டுனாலே ஆர்வமெல்லாம் தரைதட்ட ஆரம்பிச்சுரும்.  “Abase'”லருந்து  “Zephyr” வரைக்கும் படிக்கறதுக்குள்ள தூக்கம் , குமட்டல் , வாந்தி எல்லாம் வரும் . ஒருபக்கம் இவ்ளோ கஷ்டபடறதுக்கு பதில்  பேசாம சாஃப்ட்வேர் எஞ்சினியரானா என்ன அப்டின்னு ஒரு நெனப்பு , இன்னோரு பக்கம் லெஃப்ட்ல ஒரு வெள்ளக்காரி , ரைட்ல ஒரு கறுப்பு அம்மாயி , முன்னாடி ஒரு பீர் பாட்டில் , இந்த பிம்பம் புக்க திரும்ப எடுக்க வெக்கும் .

இந்த நேரம் பயலுகளும் சினிமாக்கும், ஊர் சுத்தறதுக்கும் கூப்புட்டு பாத்து அலுத்துப்போய் , “அமெரிக்கா போற மூஞ்சப்பாருன்னு” வாழ்த்துவாங்க . ஆனா அதயெல்லாம் சட்ட பன்னாம நம்மாளு புக்கும் கையுமா அலைவாரு . வீட்டுக்கு கூட கொண்டுபோய் மொட்ட மாடில படிப்பாரு .

abase v.: To lower in position, estimation, or the like; degrade.

பக்கத்து வீட்டுக்கொழந்த  கூடவே வந்து

A for apple

abbess n.: The lady superior of a nunnery.

B for ball – ப.வீ . கொழந்த

abbey n.: The group of buildings which collectively form the dwelling-place
of a society of monks or nuns.

C for cat . – ப.வீ . கொழந்த

மனசுல தோனற துன்பங்களயும் அவமானங்களயும் பல்ல கடிச்சுட்டு சகிச்சுட்டு எக்ஸாமுக்கு தயாராவாரு நம்மாள் .

ஒருவழியா எக்ஸாம்ல 1330+ , எடுத்து டீஜென்ட்டா பாஸ்பன்னி , பயலுக டிரீட் கேக்கரப்ப, ‘இல்ல மச்சி இன்னும் ‘TOEFL ‘ இருக்கும்பாரு . அவுனுக நல்லவார்த்தைல வாழ்த்திட்டு  போயிடுவாங்க . திரும்ப அதேகதை ‘TOEFL , TOEFL , TOEFL ,’னு உயிர வுட்டு எழுதனப்புரம் ” – SOP.Statement of Purpose . அதுக்கு இண்டர்நெட்ட தலகீழா  தேடி எழுதி , கடைசில  ரெக்கமென்டேசன் லெட்டர் உஷார் பன்னி 5 யுனிவர்சிட்டிக்கு அப்ளை பன்னுனா ஒவ்வொன்னா பதில் வரும்,.

Reject.Reject.Reject.Reject.

இப்போ ஊரே நமக்கு ஆறுதல் சொல்ல நேரம் பாத்துட்டுருக்கும் . நம்மாளு கோயிலுக்கெல்லாம் போக ஆரம்பிச்சுருவான் . அப்புறம் ஒரு தகவல் . “மச்சி இன்னிக்கு ரிசல்ட் ஒன்னு வருது . போய் செக் பன்னு ” அப்டின்னு . இஸ்ட தெய்வம் ,கஸ்டதெய்வம் ,இயேசு ,அல்லா ,அண்ணா ,பெரியார் ,ஜொராஸ்டிரர் எல்லாத்தையும்  வேண்டிட்டு  யாரோடயாவது நெட் செண்ட்டர் போய் மெயில் ஒபென் பண்ணா ரெண்டு மெயில் வந்துருக்கும் .

மொத மெயில் )

From : காந்தாரி
SUbj:Marriage invitation

இத்த அப்பால பாத்துக்கலாம்  அப்டின்னுட்டு அடுத்த மெயில ஒபென் பன்னுவார்.
From : State University of New York
Subj:regarding MS program

கடவுளே !!!! . . .

“Dear *******,

Thank you for your interest in the MS program of the Department of Computer
Science and Engineering at the State University of New York at Buffalo. We
received over 1000 applications to this program, and many deserving students
could not be admitted due to limitations of class size. We sincerely regret
our inability to offer you admission to our MS program at Buffalo.”

நம்மாளுக்கு அப்டியே  கண்ணுல ஜலமெல்லாம் திரளும் , சே ,ஏன் நாம இதுக்கு ஆசப்பட்டோம் . இதுக்கு முன்னாடி சந்தோசமாத்தான இருந்தோம்  ஏன் இப்படி நமக்கு மட்டும் நடக்குதுன்னு பொலம்ப ஆரம்பிக்கறப்ப சுத்திருக்கற பசங்க ஒருமாதிரி தேத்திடுவாங்க . நல்ல வேளை கடவுள் இதுக்காக நண்பர்களையாவது கூட அனுப்புனாரேன்னு தேறிட்டு

அப்டியே மெல்ல மொத மெயில திறப்பாரு .

From : காந்தாரி
SUbj:Marriage invitation

Hi all,
i’m getting married to Raman on 5th august this year in ABC kalyana mahal at
Tirupur.I will be settling down in New York, USA with my husband after
completing my 3 arrears : ).Please find attached the marriage invitation and
do attend the wedding.

நன்றி
Kaandhari

செம்ம ஈசியில்ல இது .

கடுப்புல ஃபேஸ்புக்க தெறந்து பன்னுவான் பாருங்க ஒரு ஸ்டேட்டஸ் அப்டேட் – “DAMN YOU – AMERICA MAAPPILAIS”!!

– ஈமெயில் ஃபார்வேர்டுகளிலிருந்து சுட்டது

About இணையக்கடலோடி

Fascinated by life and evolution . Opposing God and his Minion fan clubs just for the heck of it . :)
This entry was posted in தமிழ். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s