நெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .

செப்டம்பர் 1, 2009

தி நகர் எங்கே இருக்கிறது ?

கோப்பு வகை: தமிழ் — இணையக்கடலோடி @ 1:30 பிற்பகல்

வணக்கம்ங்க !!

வணக்கம் !!

தி நகர் எங்கே இருக்கிறது ?

தெளிவாக யாருக்கும் தெரிஞ்சததில்லை . உணர்ந்தவர்கள் மட்டுமே உண்டு . அருமையான இடம் . இரண்டாம் முறை சுத்திப்பார்க்க வேண்டுமென்று நினைத்தால் கீழ்பாக்க மருத்துவமனையில் ஒரு ஜன்னலோர படுக்கைக்கு இலவச சீசன் பாஸ் கிடைக்கும் .


ஹை , நல்லாருக்கே . நான் மூனாவதுமுறை போகனும்னா என்ன பன்னனும் ?

ஒருவருஷ ஏர்வாடி ரிசர்வேசன் இலவசம் , சேது விக்ரம் பக்கத்துல . சங்கிலி க்கு நீங்க எக்ஸ்ட்றா பே பன்னனும் .


தி நகர் அருமையான இடம்ன்னீங்களே , மக்கள் அதிகமா சுத்திபாக்க போவாங்களா ?
ம் ம் . ஒரு விதத்துல அப்படித்தான் . மெட்றாஸ¤க்கு ஒரு சூசைட் பாயின்ட் வேணுங்கறதுக்காக அரசானை என் 999ல் உருவாக்கப்பட்டது . லார்டு வெல்லஸ்லி காலத்துல . . . .

இருங்க இருங்க , அங்க ஷாப்பிங் பன்னலாமா ?

நீங்க அங்கன ரெண்டே ரெண்டு வேலைதான் பன்னமுடியும் . ஒன்னு ஷாப்பிங் . இன்னொன்னு சாகறது . மொத ஆப்சன் உங்களுக்கு விருப்பமிருந்தா பன்னலாம் .

நம்ம சம்சாரம் . . .

நம்ம சம்சாரமா ????

இல்லல்ல , என் சம்சாரம் , கொஞ்சம் நல்ல சில்க் சேலைகள் வாங்கனும்னு கேட்டா .  அவளை எங்கன இட்டாரது ?

போத்தீஸ்ல புடிச்சு தள்ளிட்டு ஓடிடுங்க , மாணம் மருவாதியோட நெடுநாள் நீங்க வாழறதுக்கு இதுதான் நல்ல சான்ஸ் .

மீறி நான் அங்கனயே சுத்திட்டிருந்தா ???
உங்களுக்கு பீகார் அசெம்பிளில சீட் ரெடியாயிடும் .

நானும் உள்ளார போனா?

உங்க பேரு கோபி தான . வெளில வர்றப்ப நீங்க கோபி 65 ஆயிடுவீங்க .

தங்கம் ரொம்ப சீப்ன்னு கேள்விப்பட்டேனே

ஆமா ரொம்ப சீப்தான் . ரேட்ல மட்டும் இல்ல . நீங்க அண்ணாச்சி கடையா பத்தியா பேசறீங்க  .

ஆமா ஆமா . அங்க எப்படி போறது

ரங்கநாதன் தெரு ஆரம்பத்துல போய் கூட்டதுக்கு நடுவுல நின்னுகிட்டு கண்ண மூடிட்டு காலை தூக்கிருங்க . கண்ண திறக்கரப்ப நீங்க அண்ணாச்சி கடைல இருப்பீங்க

வண்டிய உள்ள எடுத்துட்டு போலாமா .?

சே சே . லாலு பிரசாத் கூட அப்படியெல்லாம் யோசிக்கமாட்டார் .

ஓ . கூட்டமா இருக்குமா ?

ஆமா . நீங்க உங்கள சுத்தி இருக்கிற தலைகள என்னி முடிக்கறதுக்குள்ள ஜுனூன் ரெண்டுதடவ பாக்கலாம் .

ஜுணூன்? அது என்ன ?

கடவுளே . பாத்தது ஜுணூன் நீங்க இல்லியா . பெரிய அது மெகா சீரியல் .  பேசுவாங்க மாத்தி மாத்தி தமில் அதுல .

அப்ப ஆம்பளைங்க டி நகருக்கு ஷாப்பிங் போகவே மாட்டாங்களா ?
புத்திசாலிக போக மாட்டாங்க . கல்யானம் ஆனவங்க போவாங்க .

நெறயா பிளாட்பாரம் கடைகள் இருக்கும்னு கேள்விப்பட்டேனே ?
கடைகள் உண்டு . பிளாட்பாரம் கிடையாது .

சரி அதெல்லாம் எப்படி இருக்கும்

ரொம்ப நல்லாருக்கும் . Nykee , Ribok , Adeedasன்னு நல்ல நல்ல பொருள் சீப் ரேட்ல கிடைக்கும் .

ஸ்பெல்லிங் மாறி வருதே?

சே சே , நியூமராலஜிப்படி மாத்தி வெச்சுருக்காங்க , அவ்வளவுதான் .

ஏதும் நல்ல ஓட்டல் உண்டா ?

ம் . சரவன பவன் .

சுமார் அம்பது ரூபாய்க்கு என்ன கிடைக்கும் ?

நெறயா . பாதி தோசை . 5 மி.லி. சாம்பார் . சின்ன சின்ன கல்லுக .

சின்ன சின்ன கல்லுக ????

காக்கா தன்னில கல்லு தூக்கிபோட்டு தாகம் தீர்த்த கதை தெரியாதா உங்களுக்கு . அதுமாதிரி இங்க சாம்பார்ல கல்லுதூக்கி போட்டு வெச்சுருப்பாங்க . நீங்க ஈசியா குடிக்கறதுக்கு .,

ஹாட் சிப்ஸ் எப்படி ?

நீங்களே ஹாட் சிப் ஆயிடுவீங்க ரங்கநாதன் தெருவுல கால் வெச்சா

அங்க அப்ப என்னதான் நல்லாருக்கும் .

வெரைட்டி . ஏகப்பட்ட துணி , ஏகப்பட்ட பொருள் . வேற எதும் உங்கள சாவடிக்கிலன்னா கூட சாய்சஸ் பாத்து குழம்பி குழம்பியே செத்துருவீங்க .

:)

சுட்டது : ஈமெயில் பார்வேர்டுகளிலிருந்து .

ஜூலை 3, 2009

” இயல்பு ” என்றால் . . .

கோப்பு வகை: links, tamil, websites, தமிழ் — இணையக்கடலோடி @ 11:41 பிற்பகல்

பாலோ கொயல்ஹோ பற்றி அன்பர்கள் பலருக்கு தெரியும் என்று நினைக்கிறேன் . தமிழில் நமக்கு பாலகுமாரன் போல லத்தீன் அமெரிக்காவுக்கு அவர் .

அவரது ப்ளாக் ஒன்றில் வெளியான பாயின்ட்டுகள் இவை , ஓரளவு ஒத்துவருவதை தமிழ்ப்ப்டுத்தியிருக்கிறேன் . ஒரிஜினல் லிங்க் கீழே கொடுத்திருக்கிறேன் .

சில விஷயங்கள் ” மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்”ல் பார்த்தது போலவே இருக்கும் .

” இயல்பு ” என்றால் என்ன என்று சமூகம் வரையறுத்திருக்கும் விஷயங்கள் சில .

1] நமது உண்மையான தனித்தன்மையையும் கனவுகளையும் மறக்கச்செய்து , வேலை செய்வதே கடனுக்குஎன்ற நிலையில் உழல்வது

3] வருடக்கணக்கில் பல்கலைக்கழகங்களில் சுற்றிவிட்டு வேலை கிடைக்காமல் சுற்றுவது

5]  30 வருடத்திற்க்கு பிறகு நாம் ஓய்வெடுக்கலாம் என்பதற்க்காக தினமும் 9′லிருந்து 5 வரை , கொஞ்சம்கூட நமகு சந்தோஷம் தராத வேலையை செய்வது ,

5] ரிடையராகும் காலத்தில்தான் நமக்கு இதற்க்கு மேல் வாழ்க்கையை அனுபவிக்கும் அளவுக்கு தெம்பில்லை என்று உணர்வதும் , அதில் போரடித்து சில வருடங்களில் பூமிக்கு டாடா காட்டுவதும்

7] சந்தோசத்தை தேடாமல் பொருளாதார வெற்றியை தேடுவது

8] அப்படி காசை தேடாமல் சந்தோஷத்தை தேடுபவர்களை இலக்கற்றவர்கள் என எள்ளி நகையாடுவது

9] ஏன் இந்த வாழ்க்கை நமக்கு கிடைத்திருக்கிறது என்று வாழ்க்கைக்கான அர்த்தத்தை காணாமல் கார் , வீடு , சொத்து என்று ஒப்பிட்டு வாழ்க்கைக்கு அர்த்தம் கற்பிப்பது [ பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கை ]

11] பெற்றோர் எப்பொழுதுமே சரியாகத்தான் சொல்வார்கள் என நினைப்பது

12] இந்த ” இயல்புகளுக்கு ” விதிவிலக்காக உள்ள எல்லாரையும் விமர்சிப்பது

14] ஒரு அலாரம் நமது விழிப்பை நிர்னயிப்பது .

15] அச்சிடப்பட்ட அனைத்தையும் நம்புவது .

18] வாய்விட்டு அழத்தோன்றும் நேரத்தில் சிரிப்பது .

13] அக அழகுக்கு மட்டும் செலவு செய்துவிட்டு புற அழகை கண்டுகொள்ளாமல் விடுவது .

32 ] பசிக்கவேயில்லையென்றாலும் நேராநேரத்துக்கு சாப்பிடுவது .

39 ] வாழ்க்கையில் ரசித்து செய்யவேண்டிய விஷயங்களை , அதை செய்யும் தெம்பில்லாமல் போகும்வரை தள்ளிவைப்பது .

இவைகூட நாம் இன்னும் நமது கலாச்சாரத்திற்க்கு  தகுந்தது போல மாடிஃபை செய்து சில பாயிண்டுகளை சேர்க்கலாம் ..

உதாரனத்திற்க்கு

x] புறநகரில் நிலம் வாங்கி , ஒரு மாடிவீடு் கட்டி , அதற்க்கு மஞ்ச கலரில் பெயிண்ட்டடித்து வாசலில் ஈஸிசேர் போட்டு பேப்பர் படிப்பது் தான் வாழ்க்கையில் அதிக பட்ச இலட்சியம் என்று நினைப்பது .

x] சப்ஜெக்ட் கவர்கிறது என்பதற்காக் படிக்காமல் மார்க்குக்காகவும் அதை வைத்து கிடைக்கக்கூடிய வேலைக்காகவும் விருப்பப் படிப்புகளை தேர்ந்தெடுப்பது . .

x] . .

இன்னும் எழுதிக்கொண்டேபோகலாம் . உங்களுக்கு தோண்றுவதை பின்னூட்டமிடுங்கள்

சுட்ட இடம் : பாலோ

ஜூன் 25, 2009

யாரும் செல்லாத பாதையிலே . . .

கோப்பு வகை: தமிழ் — இணையக்கடலோடி @ 10:49 பிற்பகல்

எப்போதோ படித்த ராபர்ட் ப்ராஸ்டின் கவிதை . ஒவ்வொரு முறை படிக்கும்போதும் பழைய ஞாபகங்களை கிளறும் .

The Road Not Taken

Two roads diverged in a yellow wood,
And sorry I could not travel both
And be one traveler, long I stood
And looked down one as far as I could
To where it bent in the undergrowth;

Then took the other, as just as fair,
And having perhaps the better claim,
Because it was grassy and wanted wear;
Though as for that the passing there
Had worn them really about the same,

And both that morning equally lay
In leaves no step had trodden black.
Oh, I kept the first for another day!
Yet knowing how way leads on to way,
I doubted if I should ever come back.

I shall be telling this with a sigh
Somewhere ages and ages hence:
Two roads diverged in a wood, and I–
I took the one less traveled by,
And that has made all the difference.

அடுத்த பக்கம் »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.